இந்திய தொலைதொடர்புத்துறையின் குவைத் திட்டப் பணிகளில் வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :

இந்திய தொலைதொடர்புத்துறையின் குவைத் திட்டப் பணிகளுக்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பிஇ/பிடெக் எலக்ட்ரானிக் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்ற ஓஎஸ்பி இன்ஜினியர்கள் (மாத ஊதியம் ரூபாய் 56000/-), பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்ற சிவில் இன்ஜினியர்கள் (மாத ஊதியம் ரூபாய் 56000/-), டிப்ளமோ தேர்ச்சி பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள் (மாத ஊதியம் ரூபாய் ரூ.33,300/-), மேலும், 35 வயதிற்குட்பட்டு +2 தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்ற பைபர் ஸ்பைலைசர்கள் (FibreSplicers- மாத ஊதியம்- ரூபாய் 29,970-), டிப்ளமோ தேர்ச்சி பெற்ற சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர்கள் (மாத ஊதியம்-ரூபாய் 27750/-), பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்ற குவைத் நாட்டின் ஒட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூபாய் 28,860/-), GCC நாடுகளில் ஒட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூபாய் 22,200/-), இந்திய நாடுகளில் ஒட்டுநர் உரிமம் பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் (மாத ஊதியம் ரூபாய் 18,870/-). மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருடம் தொலைதொடர்புத் துறையில் அனுபவம் பெற்ற லேபர்கள் (மாத ஊதியம் ரூபாய் 17,760/-). தேவைப்படுகிறார்கள்.

மேலும் விரிவான தகவல்களுக்கு www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மூன்று வருட பணி ஒப்பந்த அடிப்படையில், தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம், உணவுப்படி, இலவச மருத்துவம், மருத்துவக்காப்பீடு, மிகை நேர பணி ஊதியம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

மேலும் 30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் இருத்தல் வேண்டும், மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் விருப்பமிருப்பின், தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் ஒரு புகைப்படத்தினை omcresum@gmail.com என்ற ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களை அறிய 044-22505886/22502267/22500417 என்ற தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம். இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கானவிவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். RC No. BN-0821/CHENNAI/CORPN/1000+/5/308/84 ஆகும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்