இந்திய தனியார் மருத்துவமனைகளை வாங்கும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள்; ஏன் விற்கபடுகின்றன?

0
711

கடந்த வருடம் , சகோதரர்களான மல்விந்தர் மோகன் சிங், மற்றும் ஷிவிந்தர் மோகன் -க்கு சொந்தமான Fortis  மருத்துவமனைக் குழுமத்தை ரூ4000 கோடிக்கு விற்றார்கள். (Max Healthcare ) மேக்ஸ் ஹெல்த்கேர் -இன்  49.7 சதவீத பங்குகள் அதன் உரிமையாளர் அனல்ஜித்திடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது . இந்தியாவின் புகழ் பெற்ற இருதய நோய் நிபுணரான டாக்டர் நரேஷ் டிரெஹான் குருகிராமில் அமைந்திருக்கும் அவருடைய மருத்துவமனையான  Medanta விலிருந்து வெளியில் வர இருக்கிறார்.  

தனியார் மருத்துவமனைகளுக்கு இந்தியாவில் மிகப் பெரிய தேவை இருந்தும் , மிகப் பெரிய தனியார் மருத்துவ குழுமங்களை கையில் வைத்திருக்கும் உரிமையாளர்கள்  வாங்குபவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது விற்க ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். 

Indian independent and professional investment information (ICRA) கொடுத்த தகவலின்படி  மார்ச் 2018  – மார்ச் 2019 நிதியாண்டில் மருத்துவமனைகளை விற்பது அதிகரித்திருக்கிறது . அதாவது 155 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மருத்துவமனைகளை விற்பது மார்ச் 2017 -மார்ச் 2018 நிதியாண்டில் ரூ2991 கோடியிலிருந்தது .   மார்ச் 2018- மார்ச் 2019 -நிதியாண்டில் ரூ7615 கோடி அதிகரித்திருக்கிறது.    

ஏன் மருத்துவமனைகள் விற்கபடுகின்றன?

இந்தியாவில் சுகாதாரத் துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. 1000 பேருக்கு ஒரு மருத்துவ படுக்கைக்கும் குறைவாக இருக்கிறது . உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி 1000 பேருக்கு 3.5  மருத்துவ படுக்கைகள் இருக்க வேண்டும். 

கேன்சர் மருத்துகள், இருதயத்துக்கான உபகரணம் (cardiac stents – A coronary stent is a tube-shaped device placed in the coronary arteries that supply blood to the heart ), மூட்டு மாற்று சிகிச்சைக்கான உபகரணங்கள் மருத்துவமனைக்கு அதிக லாபத்தை கொடுத்து வந்தது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக அரசுக்கு அதிகத் தொகை கொடுக்க வேண்டி வந்ததால் மருத்துவமனைக்கு வரும் லாபம் குறைந்தது. 

நல்ல லாபம் என்று பெருமை பேசிய நாட்கள் போயின. 2017 நிதியாண்டு வரையில் அதிக லாபம் பெற்று வந்த மருத்துமனைகளின் லாபம் 2018 நிதியாண்டில் குறைந்தது  என்று ஆகாஷ் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையின் டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி கூறியுள்ளார். 

வரி செலுத்துவதற்கு முன்னால் மருத்துவமனையின் வருமானம் 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரையில் இருந்தது . ஆனால் வரி செலுத்திய பிறகு தனியார் மருத்துமனைகள் பல திவாலாகி போனது. மருத்துவமனைகளுக்காக கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை; புதிய மருத்துமனைகள் மூடப்பட்டது . புதிய மருத்துவமனைகள் திறக்கப்பட இது சரியான நேரம் அல்ல என்றும் டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி ThePrint இதழிடம் கூறியுள்ளார்  

Association of Healthcare Providers, India (AHPI) – சுகாதாரம் வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கிர்தார் ஜே ஜியானியும் டாக்டர் ஆஷிஷ் சௌத்ரியின் கருத்தையே பிரதிபலிக்கிறார்.  சுகாதாரம் வழங்குநர்கள் சங்கத்தில் 2500 சிறப்பு (speciality) மருத்துவமனைகளும், 8000 சின்ன மருத்துவமனைகளும் உறுப்பினர்களாக இருக்கின்றன. 

அரசு அமல்படுத்தியிருக்கும் சுகாதார திட்டங்களும் மருத்துவமனையின் லாபத்தை விழுங்குகின்றன என்று மருத்துவ துறை சார்ந்த நிபுணார்கள் கூறுகிறார்கள் 

மத்திய அரசின்  திட்டமான ஆயுஷ்மான் பாரத் -தும் மருத்துவமனைக்கு வரும் லாபத்தை கணிசமான முறையில் குறைத்தது என்று டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி கூறுகிறார்.

ஆயுஷ்மான் பாரத், மற்றும் அரசின் மற்ற திட்டங்களான மத்திய அரசின் சுகாதார திட்டம் (CGHS) , ஊழியர்களின் காப்பீடு (ESI) ஆகியவை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இந்தத் திட்டங்களால் ஏற்படும் செலவுகள் மருத்துவமனைகளுக்கு  நஷ்டத்தைக் கொடுக்கிறது . 

இந்த திட்டங்களுக்காக தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காகவும்,  அறுவை சிகிச்சைக்காகவும் செலவிட்ட தொகையை அரசு திருப்பித் தரும் போது 11 சதவீதம் முதல் 15 சதவீதம் குறைவாகவே தருகிறது என்று மருத்துவத் துறையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாதவர்கள்  ThePrint இதழிடம் கூறியுள்ளனர்.  

தனியார் மருத்துவமனைகளின் நிதி நிலைமையை அரசு புரிந்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கிர்தார் ஜே ஜியானி கூறுகிறார். மருத்துவ துறையில் புதிய  முதலீடுகள் வராது  என்றும் இயங்கிக் கொண்டிருக்கும் மருத்துவமனைகள் விற்கப்படும் அல்லது மூடப்படும் என்றும் அவர் கூறினார். 

Fortis மற்றும்  Medanta மருத்துவமனையை ThePrint இமெயில் மூலம் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது பதிலளிக்கவில்லை. Max Healthcare இன் பிரதிநிதி இல்லாததால் அவர்களால் பதிலளிக்கமுடியவில்லை என்று கூறினார்கள். 

இந்த மருத்துவமனைகளை வாங்குபவர்கள் யார், ஏன் வாங்குகிறார்கள் ? 

கடந்த 4 வருடங்களாக இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை வளைத்துப் போடுவதில் சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் முன்னணியில்  இருக்கின்றன. 

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான TPG Capital மற்றும் சிங்கப்பூர் நிறுவனமான Temasek இருதய நோய் நிபுணரான டாக்டர் நரேஷ் டிரெஹானின் Medanta வை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . இவர்கள்  மணிப்பாலில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளை இயக்கி வருகிறார்கள். 

அமெரிக்க முதலீட்டு நிறுவனமான KKR நடத்தி வரும் Radiant Life Care Private Limited மருத்துவமனை Max Healthcare மருத்துவமனையை வாங்கியுள்ளது. 

மலேசியா – சிங்கப்பூர் தனியார் மருத்துமனை குழுமமான IHH Healthcare Fortis மருத்துவமனையை கடந்த வருடம் வாங்கியுள்ளது . 

மலேசியா – சிங்கப்பூர் தனியார் மருத்துமனை குழுமம் IHH Healthcare ஹைதராபத்தில் இயங்கிவரும் super-speciality Continental Hospitals and Global Hospitals – களையும் வாங்கியுள்ளது. 

2016 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இயங்கி வரும் Care மருத்துவமனையை துபாய் தனியார் பங்கு நிறுவனமான  Abraaj Group வாங்கியுள்ளது. 

மருத்துவத்துறையின் செயல்பாட்டில் குறை இருந்தாலும் தரமான சுகாதாரம் மக்களுக்கு வழங்க சர்வதேச முதலீட்டாளர்கள் தயாராக இருக்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

கடந்த 2 வருடங்களாக மருத்துவத்துறை மோசமான நிலையில் இருந்தாலும் அதை மேம்படுத்துவதற்கான  முயற்சி எடுக்கப்படும் என்று சுகாதாரம் வழங்குநர்கள் சங்கத்தின் (ICRA) துணைத் தலைவர் கபில் பங்கா கூறியுள்ளார். 

இந்தியாவில் சுகாதாரத்துறையில் போட்டி அதிகமாகியுள்ளது , அதன் தரமும் சிறந்ததாக விளங்குகிறது அதனால்தான் சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து பலர் வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

முதலீட்டு நிறுவனங்கள் எவ்வாறு உதவுகிறது ? 

மருத்துவத்துறையில் அதிக முதலீடுகள் தேவைப்படுவதால்  முதலீட்டு நிறுவனங்கள் உதவி செய்யலாம் என்று நுழைகின்றன. 

 அதிகபட்ச வருவாயை பெறுவதற்கான திட்டங்களை கொடுக்கும் வல்லுனர்கள் இந்த முதலீட்டு நிறுவனங்கள்.  கொள்கை மற்றும் செயல்முறைகளை நன்றாக வடிவமைக்கும் இந்த முதலீட்டு நிறுவனங்கள் .  அவர்கள் புதுமையான விசயங்களில் முதலீடு செய்து மிகவும் திறமையான மற்றும் செலவு குறைந்த மருத்துவத்தை அளிப்பார்கள் என்று சுகாதாரம் வழங்குநர்கள் சங்கத்தின் (ICRA) துணைத் தலைவர் கபில் பங்கா கூறியுள்ளார். 

தடையின்றி நிதி கிடைத்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை ஒழுங்காக நடத்த முடியும். தனியார் மருத்துவமனைகளின் எதிர்காலம் மோசமாகவே இருக்கும் என்றும் தேவையான நிதி, பெரிய அளவிலான வணிகம், திறமை இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனைகள் இயங்க முடியும் என்றும் சுகாதாரம் வழங்குநர்கள் சங்கத்தின் (ICRA) துணைத் தலைவர் கபில் பங்கா கூறியுள்ளார்.  

எதிர்காலத்தில் மருத்துவமனைகள் வளங்களை வீணாக்குவதைக் குறைத்து  செயல்பாடுகளை மாற்றியமைக்கும் என்று  ICRA யின் பங்கா கூறியுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தி மக்களுக்கு  குறைந்த செலவில் மருத்துவம் அளிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

theprint.in

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here