இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சாக்லேட் சந்தைகளில் முக்கிய நாடாக உள்ளது என்றும், கடந்தாண்டைவிட சாக்லேட் விற்பனை 13 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

லண்டனை தளமாக கொண்ட உலகளாவிய சந்தை நிறுவனமான மிண்டல் நடத்திய ஆய்வில், “மற்ற நாடுகளில் சாக்லேட் விற்பனைத் தேக்க நிலையில் இருந்தபோது 2016ஆம் ஆண்டு இந்தியா 2,28,000 டன் சாக்லேட்டுகளை விற்பனை செய்துள்ளதாகவும், அதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா முறையே 95,000 மற்றும் 94,000 டன் சாக்லேட்டுகள் விற்பனையாகியுள்ளதாக என தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு சந்தையில் இந்தியா (13%), மற்றும் போலந்து (2%) ஆகிய இரு நாடுகள் மட்டுமே சாக்லேட் விற்பனையில் வளர்ச்சியடைந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்தாண்டு விற்பனை முற்றிலும் சரிந்தது. ரஷ்யாவில் -2%, பிரேசிலில் -6%, சீனாவில் -6% என்ற கணக்கில் விற்பனைச் சரிந்தன.

இதுகுறித்து மிண்டல் நிறுவன இயக்குனர் மார்சியா மொகலன்ஸ்கி, “இந்தியாவில் நுகர்வோர்கள் சாக்லேட் நன்மை பயக்கும் மற்றும் வசதியாக இருப்பதாக நம்புகிறார்கள் என எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவே நாட்டின் சாக்லேட் சந்தையின் வளர்ச்சிக்கான முக்கிய காரணம்” என கூறியுள்ளார்.

இந்தியாவின் சாக்லேட் டிசைன் மார்க்கெட் 19.9 சதவிகிதம் வலுவான வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான சந்தைமதிப்பு, 2016 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் 20.6 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தில் இரண்டு இந்திய வாடிக்கையாளர்கள் (44%), சாக்லேட் மற்றும் கேக் போன்ற இனிப்பான உணவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதாக நம்புகிறார்கள். மூன்றில் ஒரு இந்தியர்கள் (35%) இந்த உணவுகள் ஆற்றல் அளிப்பதாக நம்புகிறார்கள்.

மேலும் ஆய்வின்படி, 43% இந்தியர்கள் மதிய மற்றும் இரவு உணவுகளுக்கிடையே சாக்லேட் மற்றும் கேக் போன்ற இனிப்பான உணவுகளை உண்கிறார்கள். பாதிக்கும் மேலானவர்கள் (53%) அதிக பசியின் காரணமாக உணவிற்கு இடையே இதுபோன்ற உணவுகளை உண்கிறார்கள்.

இதையும் படியுங்கள் : `நயவஞ்சகத்துடன் செயல்படுகிறதா மத்திய அரசு?`

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்