இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து காணப்பட்ட சரிவினால் கடந்த நான்கு வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு 7,87,000.86 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 561.22 புள்ளிகள் சரிந்து 34,195.94 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 168.30 புள்ளிகள் சரிந்து 10,498.25 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இம்மாதத்தின் தொடக்க வர்த்தக தினமான, கடந்த வியாழக்கிழமை (பிப்.1) 1,53,13,033.38 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு இருந்தது. அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (பிப்.2) 1,48,54,452.27 கோடியாக சரிந்தும், திங்கட்கிழமை (பிப்.5) 1,47,95,746.94 கோடி ரூபாயாக சரிந்தும், செவ்வாய்க்கிழமை (இன்று) 1,45,26,032.52 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மொத்தம் 7,87,000.86 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தில், டிசிஎஸ் (3.33%), டெக் மகேந்திரா (3.42); டாடா மோட்டார்ஸ் (5.19%) நிறுவனங்கள் சரிவைக் கண்டுள்ளன.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here