மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ்  1080×2400 பிக்சல் அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத்  5, யு.எஸ்.பி. டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. 

 மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. 


இந்தியாவில் புதிய மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2 விலை ரூ. 13,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,490 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த சலுகை குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here