ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷனை அறிமுகம் செய்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிலென்டர் பிளஸ் மற்றும் பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விலையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய லிமிடெட் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய நச்தையில் 100 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்ததை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு உள்ளது. ஹீரோ ஸ்பிலென்டர் பிளஸ் 100 மில்லியன் எடிஷன் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 67,095 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பேஷன் ப்ரோ 100 மில்லியன் எடிஷன் டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 69,200 மற்றும் ரூ. 71,400 ஆகும். 100 மில்லியன் எடிஷன் ரெட் மற்றும்  வைட் நிறங்கள் அடங்கிய டூயல் டோன் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய நிறம் தவிர இரு மாடல்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஸ்பிலென்டர் பிளஸ் மாடலில் 97.2 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 7.9 பிஹெச்பி பவர், 8.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பேஷன் ப்ரோ மாடலில் 113சசி, சிங்கில் சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 9 பிஹெச்பி பவர், 9.89 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here