இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை (இன்று) ஏற்பட்ட கடும் சரிவினால் முதலீட்டாளர்களுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 839.91 புள்ளிகள் சரிந்து 35,066.75 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 256.30 புள்ளிகள் சரிந்து 10,760.60 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவடைந்தது.

வர்த்தகத்திற்கு முன்னர் 1,53,13,033.38 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு, கடும் சரிவின் காரணமாக 1,48,54,452 கோடி ரூபாயாக சரிந்தது. நீண்ட நாள் லாபத்தில் விற்கும் பங்குகளுக்கு, இந்த பட்ஜெட்டில் 10 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்