இந்திய – அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை : ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் பின்னடைவு

With no significant movement on the India-U.S. trade negotiations yet, officials are considering taking even a modest trade deal off the table when U.S. President Donald Trump visits India on February 24-25, sources privy to the talks said.

0
204

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்களில் உடன்பாட்டை எட்டுவதில் அதிகாரிகளிடையே பின்னடைவு காரணமாக, அதிபர் டிரம்ப் இந்திய வருகையின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா முன்னுரிமைத் திட்ட அடிப்படையில் 6.5 பில்லியன் டாலர் அளவிலான 1900 இந்தியப் பொருட்களுக்கு அளித்த வரிச்சலுகை நீக்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வழங்க கோரப்படுகிறது. எஃகு, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்காவின் உயர் வரிவிதிப்பில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இன்னொருபுறம் அமெரிக்கா தனது விவசாய மற்றும் பால் பொருட்கள், மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிக சந்தை வாய்ப்புகளையும், வரிச் சலுகைகளையும் வழங்கக் கோருகிறது.

டிரம்ப் இந்தியா வரவதற்குஇன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாத காரணத்தால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here