இந்தியை திணித்தால் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – ரஜினிகாந்த்

0
193

பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, இந்தியாவின் பொதுவான மொழியாக இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு, பொதுவான ஒரு மொழி இருந்தால் அது நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது. துரதிர்ஷ்ட வசமாக நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது’. 

ஆனால், இந்தியை திணித்தால் தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஏன், இந்தி திணிப்பை வட மாநிலங்களில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்தியை ஒரே மொழியாகக் கொண்டு வர முடியாது என்று ரஜினி பதிலளித்தார்.

பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனது ரசிகர்கள் யாரும் பேனர்  வைக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன் என்று ரஜினி கூறினார்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here