மலையாளப் படம் அங்கமாலி டைரிஸ் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. விக்ரம் மல்ஹேnத்ரா அங்கமாலி டைரிஸின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான படம் அங்கமாலி டைரிஸ். எண்பதுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்த படம் இது. ஒரேயொரு காட்சியில் வரும் செம்பொன் வினோத் தவிர்த்து படத்தில் வரும் அனைவரும் புதுமுகங்கள். படத்தின் கதையை செம்பொன் வினோத் எழுதியிருந்தார்.

அங்கமாலியில் உள்ள சில இளைஞர்களின் கதையே அங்கமாலி டைரிஸ். அவர்களின் காதல், குடி, கொண்டாட்டம், வன்மம், பன்றி கறி விற்கும் தொழில் என்று அங்கமாலியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் இந்தி ரீமேக் உரிமையை விக்ரம் மல்ஹேnத்ரா வாங்கியுள்ளார். கேரளாவின் தனிப்பட்ட ஒரு இடம்சார்ந்த கதையை எப்படி இந்தியில் எடுக்கப் போகிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் கேள்வி.

இந்தி ரீமேக்கின் கிரியேடிவ் கன்சல்டன்டாக லிஜோ ஜோஸ் பெல்லிசேரி பணியாற்றுவார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்