இந்தியா விரைவில் கொரோனாவில் இருந்து மீளும் : சீனா

2 support and assistance to the best of our capability in light of the needs of the Indian side. We believe that the Indian people will win the battle at an early date," - Ji Rong, spokesperson for the Chinese embassy in india.

0
540

கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் தீவிரமான போராட்டத்திற்கு, மருத்துவ உபகரணங்களை தக்க சமயத்தில் வழங்கிய இந்தியாவின் உதவிக்கு சீனா நன்றி தெரிவித்து. அதேசமயம், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா விரைவில் வெல்லும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் இந்தியாவிற்கான சீன தூதரக செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கூறியபோது,”கொரோனாவிற்கு எதிராக இந்தியாவின் தீவிரமான முயற்சிக்கு, சீன நிறுவனங்கள் உதவ தொடங்கியுள்ளன. இந்தியாவிற்கு தேவையான ஆதரவையும், உதவிகளையும் அளிப்பதற்கு தயாராக உள்ளோம்.

சீனாவில் கொரோனாவல் 81,000 பேர் பாதிப்படைந்தனர். 3,200 பேர் உயிரிழந்தனர். சீனாவிற்கு 15 டன் அளவில், மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. அதில் முகக்கவசங்கள், கை உறைகள், மற்றும் பிற மருத்துவ சாதனங்களையும் வழங்கியது.

சீனாவும் இந்தியாவும் தகவல்தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைப் பேணி வருவதோடு, கடினமான காலங்களில் தொற்றுநோயைச் சமாளிப்பதில் ஒருவருக்கொருவர் ஆதரவையும் அளித்து வருகின்றன. இந்திய மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அதற்காக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கொரோனா தொற்றை கண்டறிதல், தடுத்தல், சிகிச்சையளித்தல் தகவல்களை சீனா பகிர்ந்து கொண்டது. இதுகுறித்த வீடியோவை கிழக்கு ஆசியா, தெற்காசிய நாடுகளுடன் , கொரோனாவுக்கு எதிரான தனது அனுபவங்களை ஆன்லைன் வீடியோவில் சீனா கூறியுள்ளது.

இந்தியா வீரைவிலேயே கொரோனாவில் இருந்து மீளும் என நாங்ககள் நம்புகிறோம். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இணைந்து, ஜி20, பிரிக்ஸ் நாடுகள் மூலமாக சீனா ஒத்துழைப்பு வழங்கும்”என அவர் தெரிவித்தார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here