வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இந்நிலையில் ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுடன் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பித்தது.

டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது.

இப்போட்டியில் முதல் முறையாக சர்வதேச டெஸ்டில் தடம் பதித்த இந்திய இளம் வீரர் பிருத்வி ஷா, தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் அடித்தார். 134 ரன்கள் குவித்த பிருத்வி, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் நாள் முடிவில் கோலி 72, பந்த் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்றைய ஆட்டத்தில் கோலி நிதானமாக ஆடி, 184 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 24-வது டெஸ்ட் சதமாகும். கேப்டனாக இது அவருடைய 17-வது சதம்.
அதே போல் பந்த், 57 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

தற்போது இந்திய அணி 118 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்