இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை, அக்டோபர் 12) 2வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷர்துல் அறிமுக வீரராக களமிறங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5-வது வீரர் இவர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் நீக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட ஜேசன் ஹோல்டரும், ஜோமல் வாரிகன் ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய போட்டியில் ஆடும் அணிகள் விவரம்:

இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.

வெஸ்ட் இண்டீஸ்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல்.

நேரம்: காலை 9.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்