வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் பிருத்வி ஷா, கேப்டன் விராட் கோஹ்லி, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின் நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பாலோ-ஆனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 2-வது இன்னிங்சில் 196 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2, ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெடடுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமாருடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here