வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வந்துள்ளது. இந்நிலையில், ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுடன் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை ஆரம்பித்தது.

டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணியைப் பொருத்த வரையில், இங்கிலாந்து தொடரில் இடம்பெற்றிருந்த முரளி விஜய், ஷிகர் தவன் இதில் இடம்பெறவில்லை.

இந்திய அணியில் பிருத்வி ஷா அறிமுகமாகி உள்ளார். அணியின் புதிய தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்- பிருத்வி ஷா கைகோக்கின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு காயம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டிக்கு கேப்டன் பொறுப்பை பிராத்வெயிட் ஏற்றுள்ளார். மேலும் சுனில் அம்பிரிஸ் ஷெர்மான் லெவிஸ் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

அணிகளின் விபரம் :-

இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ், ஷமி, குல்தீப்

வெஸ்ட் இண்டீஸ்: பிராத்வெயிட்(கேப்டன்), பாவெல், ஹெட்மையல், ஹோப், சேஸ், அம்பிரிஸ், டோரிச், பால், பிஷூ, லெவிஸ், கேபிரியேல்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்