இந்தியா மீது வர்த்தக ரீதியான நடவடிக்கை : டிரம்ப்

0
286
IMAGE:IPPODHU.COM

அமெரிக்கா மீது இந்தியா விதித்து வரும் வரும் வரிகளை இனியும் பொறுத்து கொள்ள முடியாது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை, ”அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா நீண்ட காலமாக வர்த்தக வரியை அதிகரித்து வருகிறது. இதனை இனிமேலும் பொறுக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்தியா மீது வர்த்தக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து டரம்ப் ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் கூறப்படவில்லை.

முன்னதாக, ஜப்பானில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பைச் சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

 ஈரான் வர்த்தகம், 5ஜி நெட்வொர்க், இரு நாடுகளின் உறவுகள், பாதுகாப்பு உறவுகள் ஆகியவை குறித்து அதிபர் ட்ரம்ப்பு, மோடியும் ஆலோசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here