சர்கார் திரைப்படம் எதிர்பார்த்தது போல் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் இதுவே. தமிழகத்தில் மட்டும் சுமாராக 750 திரையரங்குகள்.

சர்காருக்கு அதிகாலைக் காட்சிகள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் ஐந்து காட்சிகள் திரையிட அரசு அனுமதியளித்திருந்தது. முதல்நாளில் தமிழகத்தில் சுமார் 33 கோடிகளை சர்கார் வசூலித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்ப் படங்களில் இதுவே அதிகபட்சம். பாகுபலி 2 படத்தின் முதல்நாள் வசூலை சர்கார் முயடித்திருப்பது குறிப்பிடத்தகுந்த சாதனை.

கேரளாவில் சர்கார் பிரமாண்டமாக வெளியானது. போட்டிக்கு மோகன்லாலின் டிராமா படம் இருந்தும் முதல்நாளில் 5 கோடிகளைத் தாண்டி சர்கார் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் நன்கு கோடிகள், தெலுங்கானா, ஆந்திராவில் இரண்டு கோடிகள். இவை உத்தேச கணக்குகள். அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டவை. பல திரையரங்குகள் கவுண்டரில் 300 – 500 ரூபாய்வரை ஒரு டிக்கெட்டுக்கு வசூலித்தன.

வெளிநாடுகளில் சர்காருக்கான வரவேற்பு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அமோக இருந்துள்ளது. யுகேயில் செவ்வாய்க்கிழமை வாரநாளில் வெளியான படம் 1.17 கோடியை வசூலித்துள்ளது. இது முதல்நாள் வசூல் மட்டும். ஆஸ்ட்ரேலியாவில் முதல்நாளில் கிட்டத்தட்ட 1.16 கோடி. இவ்விரு நாடுகளிலும் இதுவே தமிழ்ப் படங்களில் அதிகபட்ச முதல்நாள் ஓபனிங் வசூல் என்கிறார்கள்.

பிரான்சில் சர்காரின் முதல்நாள் வசூல் தெரியவில்லை. அதேநேரம் ப்ரீவியூ காட்சிகளில் இதுவரை காலாவே அதிக டிக்கெட் விற்பனையில் முன்னிலையில் இருந்தது. 2149 டிக்கெட்கள் விற்பனையாகி சர்கார் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது திங்கள்கிழமை ப்ரீவியூ காட்சிகளுக்கு விற்பனையான டிக்கெட்களின் எண்ணிக்கை. முதல்நாள் செவ்வாய்க்கிழமை 3854 டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. இது பல ஹாலிவுட் படங்களின் டிக்கெட் விற்பனையைவிட அதிகம்.

யுஎஸ்ஸில் சர்கார் முதல்நாளில் சுமார் 5 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வார இறுதியில் காலா, கபாலி, எந்திரன் படங்களின் வசூலை சர்கார் முறியடித்து முதலிடம் பிடிக்கும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here