இந்திய அணி உடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 5 ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்தி‌யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை அணி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான மேத்யூஸ் இடம் பிடித்துள்ளார்.

இவர் இலங்கை டி20 அணியில் கடந்த 16 மாதங்களுக்கு முன் இடம் பிடித்திருந்தார். அதன்பின் தற்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஆகஸ்ட் மாதம் விளையாடியிருந்தார்.

மேலும் அனுபவ குசால் பெரேரா, உதானா, தனன்ஜெய-டி-சில்வா உள்ளிட்ட 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம்: லசித் மலிங்கா, தனுஷ்கா குணதிலகா, அவிஷ்கா பெர்ணான்டோ, ஏஞ்சலோ மாத்யூஸ். தசுன் ஷனகா, குசால் பெரேரா, நிரகோஷன் டிக்வெல்லா, தனஞ்சஜயா டி சில்வா, இசுசு உதானா, பனுகா ராஜபக்சா, ஒஷாடா பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்கா, லஹிரு குமாரா, குசால் மென்டிஸ், லக்ஷன் சன்டாகன், கசுன் ரஜித்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here