இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதல் 3 டெஸ்டுகளில் 2 போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த 4வது கடைசி டெஸ்டை டிரா செய்தால் தொடரை கைப்பற்றி விட முடியும். இப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முழ மூச்சுடன் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கி உள்ளது.

இன்று காலையில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்திருக்கிறது. புஜாரா 70 ரன்களுடனும் ஆட தற்போது ரஹானே அவருடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இரு அணிகளின் விபரம் :

இந்தியா:
மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பான்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா:
மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சானே, டிம் பெய்ன் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்