இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.

பின் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி,. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று( சனிக்கிழமை) 3 வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 72 ரன்களில் சமி பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா, சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் பேட் செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here