கொரோனா பரவலால் ஏற்பட்ட கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்திலிருந்து மீள இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய கரன்சி மற்றும் நிதி தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டில் மைனஸ் 6.6 சதவிகிதம் என பொருளாதார வளர்ச்சி பின்னடைவை சந்தித்ததை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2023-ம் ஆண்டுக்கு பிறகு பொருளாதாரம் வருடத்திற்கு 7.5 சதவிகிதம் வளர்ச்சியடையும் என வைத்துக் கொண்டால் கூட கொரோனா காலத்தில் சந்தித்த இழப்புகளை 2034-35-ம் நிதியாண்டில் தான் சரி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி அரசின் ஊக்க நடவடிக்கைகளை சார்ந்தே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் உக்ரைனில் நடைபெற்று வரும் போர், பணவீக்கம் போன்றவை புதிய சவால்களாக உருவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here