சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக இருதரப்புக்குமிடையில் சமரசம் செய்யும் முயற்சியில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த பேட்டியில், ராமர் கோவில் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படவில்லையென்றால் இந்தியா வரும் காலத்தில் சிரியாவாக மாறிவிடும் எனக் கூறினார். மேலும் அவர், அயோத்தி இஸ்லாமியர்களின் வழிபாட்டு இடம் கிடையாது என்றும் தெரிவித்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத் நகரின் மொகல்பூரா பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் அஃபன் என்பவர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் பேச்சு முஸ்லிம் மக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் தேவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்று சைதபாத் காவல்நிலையத்திலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: news18.com

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here