இந்தியா கொரோனா நிலவரம்

India reports 16,946 new COVID19 cases, 17,652 discharges and 198 deaths in last 24 hours, as per Union Health Ministry

0
76

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,05,12,093ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 198 பேர் பலியான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,51,727 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,652 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை ணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,46,763 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,13,603 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோர் விகிதம் 96.52% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆககுறைந்துள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் 2.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7,43,191 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 18,42,32,305 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here