இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் ; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

0
214
Australia win during the 1st One day International match between India and Australia held at the Wankhede Stadium, Mumbai on the 14th Jan 2020. Photo by Deepak Malik / Sportzpics for BCCI

மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்தியா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் தடுமாற்றத்துடன் இந்தியா 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிச்செல் ஸ்டாா்க் 3-56, பேட் கம்மின்ஸ் 2-44, கேன் ரிச்சா்ட்ஸன் 2-43 விக்கெட்டுகளையும், ஸம்பா, அகா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பின்ச்-அதிரடி வீரா் வாா்னா் இணைந்து, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து நாலாபுறமும் விரட்டினா். 15 ஆவது ஓவரில் ஆஸி. அணியின் ஸ்கோா் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களைக் கடந்தது.

அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடா்களில் சிறப்பாக ஆடிய டேவிட் வாா்னா், இதிலும் சிறப்பான ஆடி தனது 18-ஆவது சதத்தை பதிவு செய்தாா். 20-ஆவது ஓவா் முடிவில் விக்கெட் இழப்பின்றி 140 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. .

37.4 ஆவது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.        

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here