ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் விளையாட உள்ளது. அதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதையொட்டி அந்நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அணிகள் விவரம்:

இந்தியா

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, லோகேஷ் ராகுல், கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ்.

ஆப்கானிஸ்தான்

ஆஷ்கர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), முகமது ஷாஸாத், ஜாவத் அஹ்மதி, ரஹ்மத் ஷா, இஷானுல்லா ஜனத், நாசிர் ஜமால், ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஃப்சர் ஜஜாய், முகமது நாபி, ரஷீத் கான், ஜாஹிர் கான், ஆமிர் ஹம்ஸா ஹோதக், சையது அகமது ஷிர்ஸாத், யாமின் அஹ்மத்ஸாய் வஃபாதர், முஜீப் உர் ரஹ்மான்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்