இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் தொடர் பெங்களூருவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினர்.

இந்தியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 158 ரன்கள் குவித்தது. தவான் 104 ரன்களுடனும், முரளி விஜய் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஷிகர் தவான் முதல் நாளின் முதல் பகுதியில் உணவு இடைவேளைக்கு முன்பு சதமெடுத்த ஆறாவது வீரர், முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.

தவான் அதிரடியாக 96 பந்தில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தவான் விக்கெட்டை யாமின் அஹ்மத்சாய் வீழ்த்தினார்.இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய என்ற வீரர் பெருமையை பெற்றார்.

இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முரளி விஜய் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முரளி விஜய் சதத்தை நெருங்கிய வேளையில் மழை குறுக்கீட்டது.மழை நின்று ஆட்டம் தொடங்கியவுடன், முரளி விஜய் 143 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 12-வது டெஸ்ட் சதமாகும்.

DfpQoI9VAAM3o-x

முரளி விஜய் 153 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முரளி விஜய் விக்கெட்டை வஃபதார் வீழ்த்தினார்.

ஆட்ட நேர முடிவில் இந்தியா 45.1 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 35 ரன்களும், தினேஷ் கார்த்திக் 3 ரன்களும் எடுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணிக்காக யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டுக்களையும் வஃபதார், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டி20 ஆட்டங்களில் ரன்கள் அதிகம் கொடுக்காமல் பந்துவீசும் ரஷித் கான், டெஸ்ட் போட்டியில் மிகவும் தடுமாறினார். முக்கியமாக ஷிகர் தவன், ரஷித் கானின் பந்துவீச்சைக் குறிவைத்துத் தாக்கினார்.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்