இங்கிலாந்துக்கு எதிராக 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று இந்தியா ஆடியது. டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். அதேபோல் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு, சர்துல் தாகூர், புவனேஸ்வர் குமார் சேர்க்கப்பட்டார்கள்.

இந்திய அணியின் ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா – தவான் ஜோடி சேர்ந்து முதல் ஐந்து ஓவர் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தது.
18 பந்தில் 2 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி இருவரும் நிதானமாக ரன்களை குவித்தனர்.

ஆட்ட முடிவில் ஷிகர் தவான் 44 ரன்களிலும், விராட் கோலி 71 ரன்களிலும்,

டோனி 66 பந்தில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் ரஷித் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வின்ஸ் மற்றும் பெய்ர்ஸ்டோ இருவரும் அதிரடியாக ஆடினர். இந்நிலையில் பெய்ர்ஸ்டோ 30 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். மற்றொறு தொடக்க ஆட்டக்காரரான வின்ஸ் 27 ரன்களில் ரன் அவுட் ஆன நிலையில் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் இருவரும் இணைந்து 186 ரன்களை சேர்த்னர்.

இறுதியில், ஜோ ரூட், 120 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டிகளில் தனது 13-வது சதத்தை எட்டினார். மோர்கன் 108 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 10 ஓவருக்கு 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்