இந்தியாவைப் பிளவுபடுத்தும் தலைவர் – மோடியை கடுமையாக விளாசும் TIME magazine கட்டுரை

0
421

TIME magazine  மோடியை இந்தியாவைப் பிளவுபடுத்தும் தலைவர் என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதியுள்ளது. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகம் (இந்தியா) மோடியின் மற்றுமொரு 5 ஆண்டுகால ஆட்சியை தாங்குமா?  என்றும்  அக்கட்டுரை கேள்வி எழுப்பியுள்ளது . 

இந்தக் கட்டுரையின் முதல் வரி ” பெரும்பான்மைவாதத்தால் வீழ்ச்சி அடைந்த பெரிய ஜனநாயகங்களில் முதலிடம் பிடிக்கும்  இந்தியா” என்று கூறியுள்ளது. மோடியின் வருகை  தவிர்க்கமுடியாததாகவும் அதேநேரம் இந்தியாவின் பேரழிவுக்கு காரணமாகவும் இருந்தது என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.  

பிரதமர்  மோடியின் இந்து சார்புக் கொள்கையின் மூலம் இந்து – முஸ்லிம் மக்களிடையே இருந்த நல்லுறவு எவ்வாறெல்லாம் சீரழிந்தது என்பதை இக்கட்டுரை விவரித்துள்ளது. குஜராத் வன்முறையின் மூலம் மக்களின் உயிர்களை கொன்று  அரசியல் லாபம் அடைந்ததையும் இந்தக் கட்டுரை  சுட்டிக்காட்டியுள்ளது . 

இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ஜவகர்லால் நேருவின் மதசார்பற்றகொள்கை இந்தியாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்கியதையும், இந்து – முஸ்லிம் மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவத்தை மோடியின் கொள்கைகள் தரைமட்டமாக்கியதையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளது

இந்தியாவின் அடிப்படை நெறிகள், இந்தியாவின் அடிப்படை  குணங்கள்,  இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள்,  சிறுபான்மையினர் மற்றும் அதன் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் முதல் ஊடக நிறுவனங்கள் வரையில் மோடி சீரழித்துவிட்டார் என்று இந்தக் கட்டுரை கூறுகிறது .   

TIME magazine இல் இடம்பெற்ற இந்தக் கட்டுரை மக்களவைத் தேர்தலில் 2 கட்ட தேர்தல்களே முடிய இருக்கும் நிலையில் வெளியாகி உள்ளது.  மே 23 இல் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. 

TIME magazine இல் இந்தக் கட்டுரையை எழுதிய ஆதிஷ் தசீர்  இந்தக் கட்டுரையில் – உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் முன்னெப்போதையும்விட பிளவுபட்டு நிற்கிறது. பசுக்களின் பெயரால் பசுக் குண்டர்கள் நடத்திய கும்பல் கொலைகள், 2017 இல் யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேச முதல்வராக நியமித்தது, போபாலில் பிரக்யா சிங்கை வேடபாளராக நிறுத்தியிருப்பது வரையிலான விசயங்கள் இந்தக் கட்டுரையில் பேசப்பட்டுள்ளது . 

மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினரான, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பகுத்தறிவாளர்கள் எல்லோருமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். மோடியின் பொருளாதார கொள்கைகள் நாட்டை சிதைத்து , மத தேசியவாதம் என்ற விசத்தை பரப்பியுள்ளது. 

மோடி 2014 இல் கனவுகளை பிரதிநிதிபடுத்தியது போல் இனிமேல் எப்போதும் கனவுகளை முன்னெடுத்து செல்லமாட்டார்.  2014 இல் மோடி ஒரு தூதர்  (மெஸ்ஸையா) போல செயல்பட்டார், எதிர்காலம் பிரகாசமாக இருக்கும், ஒரு பக்கம் இந்துமத மறுமலர்ச்சி, மறுபுறம் வடக்கு கொரியாவின் பொருளாதார திட்டம் என்றெல்லாம் கூறினார். தற்போது அவர் ஒரு சாதாரண தோல்வியடைந்த அரசியல்வாதி, திரும்பவும் தன்னை தேர்ந்தெடுக்குமாறு கூறும் தோல்வியடைந்த அரசியல்வாதி என்று குறிப்பிடபட்டுள்ளது அந்தக் கட்டுரையில் .   

மோடியின் அதிர்ஷ்டம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள்  பலவீனமாக இருக்கிறார்கள் என்றும் எந்த சிறந்த கொள்கையும் இல்லாமல் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே காங்கிரஸ் செயல்படுகிறது என்றும் இந்தக் கட்டுரை கூறுகிறது 

இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு  எதிர்க்கட்சிகள் மோடியை தாக்கி வருகின்றன.  இந்தக் கட்டுரையின் முதல் வரியான – பெரும்பான்மை வாதத்தால் வீழ்ச்சி அடைந்த பெரிய ஜனநாயகங்களில் முதலிடம் பிடிக்கும்  இந்தியா –  மேலும் உங்களைப் பற்றிய உண்மையை உலகம் பார்க்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் பெண்கள் பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

டைம் இதழில் மோடிக்கு எதிராக தலையங்கம் வெளியாகியிருப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2012ஆம் ஆண்டு நரேந்திர மோடி குறித்து மிகக் கடுமையான விமரிசனங்களோடு கட்டுரை வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது .


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here