அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரி விதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் :

“இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூறமுடியாது. எனவே அவர்கள் உலகவர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறமுடியாது” என கூறினார்.

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர்” எனவும் கூறினார்.

உலக வர்த்தக அமைப்புடன் அமெரிக்கா நடத்திய வர்த்தக மோதல்கள், சுற்றுச்சூழல் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியது போன்ற பிரச்சினைகளில் அமெரிக்கா அடைந்த வெற்றியை பட்டியலிட்ட டிரம்ப், வளரும் நாடுகளுக்கு அதிக அளவில் வர்த்தகச் சலுகைகளை இனி கொடுக்கப்போவதில்லை என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here