இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால் இந்தியா பயனடையும் என்பதை உறுதியாக கூற முடியாது – அபிஜித் பானர்ஜி

There is no certainty that India will gain from shifting of businesses from China, the nobel laureate said

0
208

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, ”சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால், இந்தியா பயனடையும் என்பதை உறுதியாக கூற முடியாது,” என, பொருளாதார நோபல் வல்லுநர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அவர், வங்காள மொழி தனியார் தொலைகாட்சிக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவ, சீனா தான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதனால், சீனாவில் இருந்து வெளியேறும் தொழில்கள், வர்த்தகங்கள் நிறுவனங்கள் அருகிலுள்ள தொழிலாளர் நிறைந்த நாடுகளான தைவான், இந்தோனேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு தங்களது தளத்தை மாற்றக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கினால் இந்தியா பயன்பெறும், வளர்ச்சி பெறும்  என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதை உறுதியாக கூற முடியாது. 

சீனா தன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்து விட்டால் என்ன ஆகப்போகிறது. அதனால் சீன தயாரிப்பு பொருள்களின் விலை மலிவாகும். அப்போது மக்கள் தொடர்ந்து அவர்களிடம் தான் பொருள்களை வாங்குவார்கள். 

தொற்று நிவாரணத்துக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் அந்தந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியில் ஒரு கணிசமான நிவாரணப் உதவிகளுக்காக செலவிடுகின்றனர். ஆனால் இந்தியா அவ்வாறு ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக ரூ .1.70 லட்சம் கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது, இது அதிகரிக்கப்பட வேண்டும்.

மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அவர்களிடம் இப்போது பணம் இல்லை. அவர்களுக்கு எதையும் வாங்கும் சக்தியும் இல்லை. எனவே, அரசு அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, மக்களின் கைகளில் பணத்தை வழங்கி அவர்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை புதுப்பிக்க முடியும். 

“சாமானிய மக்கள்தான் நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துகின்றனர்; பணக்காரர்கள் அல்ல,” என்றார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பல மாநிலங்களை கடந்து, தங்கள் ஊர் செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நாம் சிந்திக்கவில்லை. அவர்கள் கைகளில் தங்குமிடம் மற்றும் பணம் இல்லை. 

மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அவர்களிடம் எமர்ஜென்சி குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அவற்றில் கடன் திருப்பிச் செலுத்துவதில் தடை நீக்குவது ஒன்றாகும். 

“மற்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பிரச்னை எங்குள்ளது என்பதுதான் பிரச்சினை, ”ஆக உள்ளது என்றார்.

சமூக இடைவெளியுடன் பொருளாதாரத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற நிலையை இன்னும் எட்டப்படவில்லை.

நாடு தழுவிய பொது ஊரடங்கு குறித்து அவர் கூறுகையில், இந்தியா ஒரு பெரிய நாடு. அங்கு பரிசோதனையின்  அளவு ஆரம்பத்தில் இருந்தே அதிகரித்திருக்க வேண்டும் என்றவர், இந்தியாவில்  தொற்று பாதிப்பு குறித்து சரியாக தெரியவில்லை. காரணம் இன்னும் பெருமளவு மக்களுக்கு பரிசோதனை செய்யப்படவில்லை. பொது ஊரடங்கை தளர்த்துவதற்கு முன்பு கூடுதலான தொற்று பரிசோதனைகளை செய்ய வேண்டும்.  கூடதலான பரிசோதனைகளால் பலி எண்ணிக்கை விகிதங்கள் குறையும். மேற்கு வங்கத்தில், இப்போது சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, அங்கு அதிகரிக்கு பலி எண்ணிக்கை விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார் அபிஜித் பானர்ஜி. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here