வீவோ நிறுவனத்தின் சிறந்த படைப்பாக கருதப்படும் வீவோ நெக்ஸ் சென்ற மாதம் வெளியானது. குறைந்த விலையிலான ஸ்நேப் டிராகன் 710 SoC பிராஸஸர் மற்றும் உயர் ரக ஸ்நேப்டிராகன் 845 உடன் கூடிய இரண்டு பதிப்புகள் சீனாவில் வெளியானது. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளுக்கு எப்போது வரும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் மிக விரைவில் இந்த ஸ்மார்ட்ஃபோன்
வெளியாகவுள்ளது.

ஜூலை மூன்றாம் வாரத்தில் இந்த ஸ்மார்ட்ஃபோனை வெளியிட வீவோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு ரூ. 40,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளாதாக தெரிகிறது. இரண்டு பதிப்புகளும் வெளியாகுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்ற போதிலும் விலையை வைத்து பார்க்கும் போது
வீவொ நெக்ஸ் நிச்சயம் வெளியாகும் என தெரிகிறது.

5b277d5a40686

வீவோ நெக்ஸ் மற்றும் வீவோ நெக்ஸ் அல்டிமேட் ஆகிய இரண்டிலும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்னவென்றால் திரைமேல் உள்ள கைரேகை சென்சார் மற்றும் அதன் ஸ்நேப்டிராகன் 710 சிப் தான். மேலும் நெக்ஸில் 6 ஜிபி ரேம் மற்றும் நெக்ஸ் அல்டிமேட்டில் 8 ஜிபி ரேம் உள்ளது. இந்தியாவில் இதன் விலை சீன விலைக்கு இணையாகவே இருக்கும். மிமிக்ஸ் 2 மற்றும் ஒன்பிளஸ் 6 பேஸிக் பதிப்பைக் காட்டிலும் இதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். ஸ்நேப்டிராகன் 710 உடன் வரும் முதல் இந்திய கைப்பேசியாக வீவோ நெக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy : Gizchina

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here