இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப்புவோம் : சீனாவிற்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்க அரசு

India-China border stand-off: Mike Pompeo said US had reduced troops based in Germany to face threats in other places

0
435

இந்தியாவிற்கு ஆதரவாகவும், சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் என்று அமெரிக்க அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது.

லடாக் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15 ஆம் தேதி இரவு சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையையும் மீறி சீனா தனது கட்டமைப்புகளை எல்லையில் நிறுத்தியிருப்பதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தன. இதனால் இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நீடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால், உலக அளவில் படைகளை நிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய  மைக் பாம்பியோ,  அமெரிக்கா தனது படைகளை ஜெர்மனியில் இருந்து விலக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கே படைகள் தேவையோ அங்கே அமெரிக்கா இனி படைகளை அனுப்பும். முக்கியமாக சீனாவின் பிஎல்ஏ ராணுவம் எங்கே இருக்கிறதோ அங்கே படைகளை அனுப்புவோம்.

சீன ராணுவத்திற்குப் பதிலடி கொடுக்கும் அளவிற்கு தங்களிடம் போதிய படை இருப்பதாகக் கூறிய மைக் பாம்பியோ, சீனாவின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்களில் தங்களின் படைகளைக் களமிறக்குவோம் எனச் சூளுரைத்தார்.

இதனால்தான் ஐரோப்பாவிலிருந்து நோட்டோ படைகளைத் திரும்பப் பெற்றதாகவும், ஆபத்து இருக்கும் இடங்களில் இனி அமெரிக்கப் படைகள் இருக்கும் என்றும் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்யா,  இந்தியா மற்றும் சீனா விஷயத்தில் தலையிட போவதில்லை என்று கூறிவிட்ட நிலையில், தற்போது அமெரிக்கா வெளிப்படையாக தனது ஆதரவை இந்தியாவிற்கு வழங்கி உள்ளது. இந்தியாவிற்கு எதிராக ரஷ்யா களமிறங்கும் என்று சீனா எதிர்பார்த்த ஏமாந்த நிலையில்அமெரிக்காவில் இந்த அறிவிப்பு சீனாவுக்கு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here