இந்தியாவுக்கான ஜிஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அது சீனாவுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

மேலும் சீனாவுடனான வர்த்தகப் போரால், இந்தியா போன்ற வர்த்தக முன்னுரிமை (ஜிஎஸ்பி) நாடுகள் பலனடையும் என்றும்கூறப்பட்டுள்ளது.

 ஜிஎஸ்பி முறையில் முன்னுரிமை பெற்ற நாடுகளான இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா, துருக்கி போன்ற நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு பல்வேறு சலுகை விகிதங்களில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  கடந்த மாதம் 4ஆம் தேதி இந்தியாவுக்கான ஜிஎஸ்பி சிறப்பு அந்தஸ்தை 60 நாள்களுக்குள் ரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஜிஎஸ்பிக்கான கூட்டணி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரில், ஜிஎஸ்பி நாடுகளான இந்தியா, தாய்லாந்து, கம்போடியா, துருக்கி போன்ற நாடுகள் பலன் பெறும்.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை அடுத்து, ஜிஎஸ்பி நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு10.5 கோடி டாலர் (சுமார் ரூ.737.5 கோடி) மிச்சமாகியுள்ளது.

இது, கடந்த 2018-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தோடு (2.8 கோடி டாலர்) ஒப்பிடுகையில் 36 சதவீதம் அதிகமாகும்.
2019ஆம் ஆண்டில் அதிகரித்துள்ள ஜிஎஸ்பி நாடுகளின் இறக்குமதிப் பொருள்களில்  90 சதவீதம், கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனப் பொருள்களின் வகையைச் சேர்ந்தவை ஆகும். எனவே, சீனாவுடனான வர்த்தகப் போரால் இந்தியா போன்ற ஜிஎஸ்பி நாடுகள் பலனடையும். ஆனால், இந்தியாவுக்கான ஜிஎஸ்பி அந்தஸ்தை நீக்கினால், அமெரிக்க நிறுவனங்கள் மீண்டும் சீனப் பொருள்களையே நாடத் தொடங்கும். அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here