அவசர செலவுக்கு சிறிய தொகை முதல் அல்லது எதிர்பாராத பெரிய செலவுக்கு பணம் வேண்டுமென்றால், பத்தாயிரம் ரூபாய் முதல் சில லட்சங்கள் வரை கடனாக வழங்க பலவேறு லோன் ஆப்கள் உள்ளன. ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்று சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. அதைப்பற்றிய முழு விவரங்கள் இங்கே

இன்ஸ்டா லோன், குவிக் லோன், இன்ஸ்டன்ட் கேஷ், ஃபாஸ்ட் கேஷ் என்று பல பெயர்களில் ஆப் ஸ்டார்கள் மற்றும் கூகுள் பிலேவில் பல்வேறு லோன் ஆப்களை தினசரி காண்கிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள், இன்டர்நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, ஆன்லைன் ஷாப்பிங் ஆகியவற்றில் பல்வேறு மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. பல வங்கிகளும் பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது பற்றி பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:👇

.

இதைத் தொடர்ந்து, லோன் வழங்கும் ஆப்கள் என்ற பெயரில் சில செயல்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டுள்ளன சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளியானது. டிஜிட்டல் கடன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 2020 முதல் மார்ச் 2021 வரை, 2500 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கடன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. அதிகபட்ச புகார் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வருகிறது என்று அறியப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் கர்நாடகா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் டிஜிட்டல் கடன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. இதைப் பற்றிய தனிப்பட்ட விசாரணையில், ரிசர்வ் வங்கி ஒரு குழுவை அமர்த்தியுள்ளது. அந்த விசாரணையின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கி, கிட்டத்தட்ட 600 மேற்பட்ட கடன் வழங்கும் சட்டவிரோதமான செயலிகளை ஆப்ஸ்டோரில் கண்டறிந்துள்ளது.

இதையும் படியுங்கள்:👇

.

“தோராயமாக, ஆண்டிராய்டு ஃபோன்களில் இருக்கும் 80 க்கும் மேலான ஆப் ஸ்டோர்களில், 1100 கடன் வழங்கும் ஆப்ஸ் உள்ளன. loan, instant loan, quick loan ஆகிய குறிச்சொற்கள் கொண்ட இந்தியன் லோன் செயலிகள் மட்டுமே 1100 உள்ளன. இதில் 600 ஆப்கள் சட்டவிரோதமானவை” என்று ஆர்பிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

மொபைல் ஆப்ஸ் வழியே டிஜிட்டல் கடன் வழங்குவதில் நடக்கும் மோசடிகளைத் தடுக்க தனிப்பட்ட சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது. மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம், எனவே, டிஜிட்டல் கடன் வழங்கும் சேவைகளில் மோசடி ஏற்படாமல், பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பது தான் முக்கியக் குறிக்கோள் என்றும், அதற்காக பல்வேறு வழிமுறைகளையும் பரிசீலித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:👇

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here