இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 42,779 பேருக்கு கொரோனா

With 45,209 new COVID19 infections, India's total cases rise to 90,95,807

0
62

இந்தியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 90,93,376-ஆக அதிகரித்தது.

இதேபோல், கொரோனாவில் இருந்து 43,493 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 85,21,617 ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் 4,40,962 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 4.85சதவீதமாகும். கொரோனாவுக்கு மேலும் 501 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,33,227-ஆக அதிகரித்தது.

‘நவம்பா் 21 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13,17,33,134 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சனிக்கிழமை மட்டும் 10,75,326 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து 93.69சதவீதம் போ் குணமடைந்தனா். உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.85% ஆக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here