இந்தியாவில் 18 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

ndia's Covid-19 tally has risen to 18,03,696 including 5,79,357active cases, 1,186,203 cured/discharged/migrated. There have been a total of 38,135 deaths, according to the health ministry.

0
119

இந்தியாவில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்பினும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 52,972 -பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 771-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,03,696  ஆக உள்ளது.

அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,135 ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்புடன்இன்றைய நிலவரப்படி 5,79,357 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 1,186,203-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.  

ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக  இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here