’இந்தியாவில் 16 கோடி பேர் சுத்தமான குடிநீரைத் தேடி அலைகின்றனர்’

0
614

இந்தியாவில் 163 மில்லியன் பேர் சுத்தமான குடிநீரைத் தேடி அலைவதாக வாட்டர் எய்டு என்னும் நிறுவனத்தின் (WaterAid) அறிக்கை கூறுகிறது.

லண்டனைச் சேர்ந்த வாட்டர் எய்டு என்ற அமைப்பு, இந்தாண்டிற்கான உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகள் எவை என்பது குறித்து ஆய்வு செய்து அந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் 16 கோடியே 31 லட்சம் பேருக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் கடும் சிரமம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிகமான மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

இதனைத்தொடந்து எத்தியோப்பியா 6.5 கோடி பேருக்கும், நைஜீரியாவில் 5.9 கோடி பேருக்கும்; சீனாவில் 5.7 கோடி பேருக்கும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது இடத்தில் இந்தோனேஷியாவும், ஏழாவது இடத்தில் தான்சானியாவும், எட்டாவது இடத்தில் உகாண்டாவும், ஒன்பதாவது இடத்தில் பாகிஸ்தானும், 10வது இடத்தில் கென்யாவும் உள்ளன.

இந்தியாவில் இந்த நிலை ஏற்படுவதற்கு நிலத்தடி நீர் குறைந்து போனது, வறட்சி, தொழிற்சாலைகளுக்கு அதிகளவு தேவைப்படும் தண்ணீர், மாசுபாடு மற்றும் நீராதாரத்தைப் பெருக்குவதற்கான முறையான திட்டமிடல் இல்லாதததும் காரணமாகக் கூறப்படுகிறது.

வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 90 சதவிகித கிராமப்புற பகுதிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 56.3% கிராமப்புற பகுதிகளுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதாக கடந்த ஜனவரியில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here