இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி

India's #COVID19 tally reaches 63,94,069 with a spike of 81,484 new cases & 1,095 deaths reported in last 24 hours.

0
332
File Image

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 63,94,069 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 81,484  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,095 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,773 ஆகஉயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,52,078 ஆகஉயர்ந்துள்ளது. நேற்று(வியாழக்கிழமை) மட்டும் 78877 பேர் குணமடைந்துள்ளனர். 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,42,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்பு 1.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 83.70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இன்று(வெள்ளிக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்:

  • மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 2,59,440; குணமடைந்தோர் : 1,10,4426;இறப்பு : 37,056
  • தமிழகம் : சிகிச்சை பெறுவோர் : 46,369 ; குணமடைந்தோர் : 5,47,335; இறப்பு : 9,586
  • டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 26,738 ; குணமடைந்தோர் : 2,50, 613; இறப்பு : 5,401     
  • கேரளா : சிகிச்சை பெறுவோர் : 72,418 ; குணமடைந்தோர் : 1,31,052; இறப்பு : 771
  • கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 1,10,431; குணமடைந்தோர் : 4,92,412; இறப்பு : 8,994
  • ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் :  57,858 ; குணமடைந்தோர் : 6,36,508; இறப்பு : 5,869

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here