ஹூவாய் நிறுவனம் அதன் முன்னணி தயாரிப்பான மேட் 20 ப்ரோவினை இந்தியாவில் இன்று வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதல்முறையாக 7என்.எம் ஹாய்சிலிகான் கிரின் 980 SoC இயங்குகிறது. ஹூவாய் மேட் சீரிஸ்கள் இந்தியாவில் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் இதில் ட்ரிபிள் கேமரா செட்ஆப் கொண்டுள்ளதே இதன் முக்கியம்சம். முன்னதாக வெளிவந்த ஹூவாய் பி20 ப்ரோவில் உள்ளது போல இதிலும் இந்த ட்ரிபிள் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜி, வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பிரத்தியோகமாக அமேசான் இந்தியாவில் கிடைக்கிறது. டெல்லியில் இன்று காலை இதன் அறிமுகவிழா நடைபெறுகிறது. ஹூவாய் மேட் 20 ப்ரோ அறிமுக நிகழ்ச்சியை இங்கு நேரடியாக காணலாம்.

ஹூவாய் மேட் 20 ப்ரோவின் விலை

6ஜிபி ரேம்/ 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஹூவாய் மேட் 20 ப்ரோவின் ஆரம்ப விலை EUR 1,049(ரூ.88,400). 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ஹூவாய் தள பட்டியலில் உள்ளது. அதன் விலை குறிப்பிடப்படவில்லை. இதுவும் பிற ஹூவாய் போன்களை போன்றதே, இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ பிரத்தியோகமாக Amazon.in-ல் விற்பனையாகிறது.

ஹூவாய் மேட் 20 ப்ரோவின் முக்கியம்சங்கள்

மேட் 20 ப்ரோ ஆண்ட்ராய்டு பையை அடிப்படையாகக் கொண்டு EMUI 9.0 சாப்ட்வேரில் இயங்குகிறது. 6.39 இன்ச் QHD+(1440×3120 pixels) ஓஎல்இடி டிஸ்பிளே 19:5:9 மற்றும் 86.9 சதவீதம் என்ற வீதத்தில் மொபைல் அளவு இருக்கும்.

(256 ஜிபி வரை) நானோ மெம்மரி கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். 7என்.எம் ஹாய்சிலிகான் கிரின் 980 SoC கொண்டுள்ளது. மேட் 20 ப்ரோவின் பின்புறத்தில் மூன்று கேமிராக்கள் உள்ளன. 24 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா உள்ளது. இதில் 4,200 mAh பேட்டரி உள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்