இந்தியா உள்ளிட்ட 100 நாடுகளில் இன்று ஆப்பிள் டிவி பிளஸ்
(Apple TV+) வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் ஆப்பிள் டிவி பிளஸ் காண ஒரு வார இலவச ட்ரயல் வழங்கப்படுகிறது. ஆப்பிள் சாதனம் ஏதும் சமீபத்தில் வாங்கியிருந்தால் உங்களுக்கு ஓராண்டுக்கான சந்தா இலவசம். நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போல் இல்லாமல் முற்றிலும் தனது சொந்தத் தயாரிப்பிலான ஒரிஜினல் வீடியோக்களை மட்டுமே வெளியிட உள்ளது ஆப்பிள் டிவி பிளஸ்.

முதற்கட்டமாக 42,635 கோடி ரூபாய் செலவில் 10 நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது ஆப்பிள். கூடுதலாக ஆப்பிள் மியூசிக் ஸ்டூடண்ட் ப்ளான் ஒன்றும் வெளியாகி உள்ளது.இந்தியாவில் இதற்கான சந்தா மாதம் ரூ. 49 ஆகும்.

ஆப்பிள் டிவி பிளஸ் சேவை தற்போது ஐபோன், ஐபாட் டச், ஐபேட், ஆப்பிள் டிவி, மேக் லேப்டாப் ஆகிய தளங்களில் மட்டுமே காண முடியும். ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டு டிவி போன்ற இதர ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஆப்பிள் டிவி பிளஸ் வெளிவருமா என்பது குறிந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here