இந்தியாவில் ஜூன் 20ஆம் தேதி ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ வெளியாகிறது.

ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே, மேலும் கீழுமாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு பின்புற கேமரா, பின்புறத்தில் மோட்டோரோலா லோகோவிற்கு கீழ் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், பளபளப்பான பின்புற பேனல் எனக்கலக்கலாக  வெளிவருகிறது மோட்டோரோலா ‘ஒன் விஷன்’. இரண்டு ஹைப்ரிட் சிம் ஸ்லாட்களை கொண்ட இந்த ஒன் விஷன், அண்ட்ராய்ட் பை(AndroidPie) இயங்குதளத்தில் இயங்கும்.

6.3-இன்ச் FHD+ (1080×2520 பிக்சல்) டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 2.2GHz எக்சினஸ் 9609 ஆக்டா-கோர் ப்ராசஸர் இணைக்கப்பட்டுள்ளது. 4 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 512 ஜி.பி வரை மெமரியை அதிகரித்துக்கொள்ளலாம்.

மேலும் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அத்துடன் 8x டிஜிட்டல் ஜூம், போர்ட்ரைட் மோட், மேனுவல் மோட், சினிமாகிராப் போன்ற பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். செல்ஃபி பிரியர்கலுக்காக 25 மெகாபிக்சல் அளவினில் ஒரு முன்புற கேமராவுடன் வெளிவந்துள்ள இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’.

3500mAh பேட்டரி மற்றும் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த சார்ஜரில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்திற்கான சக்தியை இந்த பேட்டரி அளிக்கும். ப்ளூடூத் v5, டைப்-சி சார்ஜ் போர்ட் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவையும் மேலும் பல சென்சார்கள் பொருத்தப்பட்டு வெளிவருகிறது.

மோட்டோரோலாஒன் விஷன்‘-ன் விலை!

பிரேசில், சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ ஏற்கனவே வெளியாகி விற்பனைசெய்யப்பட்டு வருகிறது. பிரேசிலில் இந்த ஸ்மார்ட்போன் 1,999 பிரேசிலியன் ரியால் (ரூ.35,800)என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், உலக அளவில் இந்த ஸ்மார்ட்போன் 299 யூரோக்களுக்கு (ரூ.23,500)விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரு வண்ணங்களில் வெளியாகவுள்ளது – சபையர் ப்ளூ(SapphireBlue) மற்றும் வெண்கலம்(Bronze). 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here