இந்தியாவில் விலை குறைக்கப்பட்டு விற்பனையாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

The new OnePlus 7T Pro price is reflecting on both Amazon.in and OnePlus.in.

0
105

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும், ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை ரூ. 6 ஆயிரம் குறைக்கப்பட்டது.

oneplus-7t-pro-image-1570799975159

இந்நிலையில், ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதியவிலை குறைப்பின் படி ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலின் விலை ரூ. 43,999 என மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு உள்ளது.

சமீபத்திய விலை குறைப்பு ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டிற்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் / கிரெடிட் கார்டு இம்ஐ-க்களுக்கு ரூ.3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை சேர்க்கும் பட்சத்தில் ஒன்பிளஸ் 7டி ப்ரோ மாடலை ரூ. 40,999 விலையில் வாங்கிட முடியும்.

குறைக்கப்பட்ட புதிய விலை ஒன்பிளஸ் மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது.

Ei-Q7-u-AXs-AAk568

இந்த ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வாங்குவோருக்கு கார்பன்/சேன்ட்ஸ்டோன் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here