இந்திய பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரின் வாட்ஸ்அப் விவரங்களை இஸ்ரேல் நாட்டு ஸ்பைவேர் கண்காணித்ததாக, அதனை நிர்வகித்து வரும் பேஸ்புக் நிறுவனம் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்துக்கு சொந்தமான பெகாசஸ்(Pegasus) என்ற ஸ்பைவேர், இந்திய பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சுமார் 1,400 பயனாளிகளை வேவு பார்த்ததாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தெரிவித்தது.

இதனை தற்போது உறுதி செய்துள்ள பேஸ்புக் நிறுவனம், சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அதுகுறித்து எச்சரித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆனால் வேவு பார்க்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட பேஸ்புக் நிறுவனம் மறுத்துவிட்டது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள என்எஸ்ஓ குழுமம், பேஸ்புக் நிறுவனத்தின் குற்றச்சாட்டை முறையே எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பெகாசஸ் என்ற வேவு பார்க்கும் மென்பொருள் சேவை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளதாக என்எஸ்ஓ குழுமம் விளக்கமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here