இந்தியாவில் ரெட்மி நோட் 7 10 லட்சம் போன்கள் விற்பனை சாதனை

0
333

ஆன்லைன் தளம் மட்டுமின்றி இந்த எம்ஐ தயாரிப்புகள் ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட்மி நோட் 7 வரிசை போன்கள் இந்தியாவில் ஓரே மாதத்தில் சுமார் 1 மில்லியன் யுனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. சியோமி சார்பில் வெளியான ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவில் மட்டுமின்றி இந்த போன்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பனை பெற்று விற்பனை சாதனை படைத்து வருகின்றனர். இம்மாத துவக்கத்தில் சியோமி நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 4 மில்லியன் யுனிட் தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளதாக சியோமி நிறுவனம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த தயாரிப்புகள் வெளியாகிய சில வாரங்களிலே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சோனி IMX586 48- மெகா பிக்சல் சென்சார் மட்டும் பல முக்கிய அமைப்புகளுடன் இந்தியா மற்றும் சீனாவில் வெளியானது. பட்ஜெட் தயாரிப்புகளான இந்த போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த போன்கள் மட்டுமின்றி சியோமி சார்பில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ போண்ட் 3 ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பும் விற்பனையில் சாதனை புரிந்துள்ளது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here