ரெட்மி நோட் 6 ப்ரோவின் விலை ரூ.15,000 லிருந்து 20,000க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கியம்சம் முன்பக்கத்தில் இருக்கும் டூயல் கேமரா செட்டப் ,19:9 டிஸ்பிளே, 4000 mAh பேட்டரி, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம், 6ஜிபி ரேம், 64ஜிபி உள்கட்ட சேமிப்பு மற்றும் MIUI 10 ஆகும். சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிரத்தியோகமாக Mi.com தவிர பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும் என்பது ஏற்கனவே நாம் அறிந்த தகவலாகும்.
ரெட்மி நோட் 6 ப்ரோவின் வெளியீட்டு விழா நேரடியாக

ரெட்மி நோட் 6 ப்ரோவின் அறிமுக விழாவினை Mi.com என்ற இணையதளத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் நேரடியாக காணும் வகையில் சியோமி வடிவமைத்திருந்தது.


ALSO SEEஇந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவின் விலை,

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ தாய்லாந்தில் செப்டம்பர் மாதம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் 4ஜிபி ரேம்/ 64ஜிபி உள்கட்ட சேமிப்பு கொண்ட வேரியண்ட்டின் விலை THB 6,990(சுமார் ரூ. 15,300) என்பதை மட்டும் அறிவித்தது. அப்போது 6ஜிபி ரேம்/ 64ஜிபி உள்கட்ட சேமிப்பு வேரியண்டும் இந்தியாவில் கிடைக்கும் என்பது உறுதியானது.
இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவி இரு வேரியண்ட்களின் விலை ரூ.15,000 லிருந்து 20,000க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்.23 ஆம் தேதி மதியம் 12 மணியிலிருந்து பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் ரெட்மி நோட் 6 ப்ரோவினை வாங்கலாம்.

ரெட்மி நோட் 6 ப்ரோவின் முக்கியம்சங்கள்

ரெட்மி நோட் 5 ப்ரோவின் (ரூ.13,294) வாரிசு ரெட்மி நோட் 6 ப்ரோவாகும் இதில் ஒரு சில அப்கிரேட் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்பக்கம் இருக்கக்கூடிய டூயல் கேமரா, பெரிய டிஸ்பிளே, பி2ஐ நீரை விரட்டும் நானோ தொழில்நுட்பம் MIUI 10 ஆகும்.

பெரிய மற்றும் பிரகாசமான டிஸ்பிளே

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.
முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here