இந்தியாவில் மேலும் 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
161

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.89 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.92 கோடியை தாண்டியது. (23/01/22) இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 3,33,533 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக உயர்ந்தது.

* புதிதாக 525 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,59,168 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,87,205 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.18% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.25% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.57% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 1,61,92,84,270 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 71,10,445 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here