இந்தியாவில் தொடர்ந்து  கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.(19/02/22) நேற்று 22 ஆயிரத்து 270 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 19, 968 ஆயிரமாக குறைந்தது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 22 ஆயிரத்து 491 ஆக உயர்ந்தது.தினசரி பாதிப்பு விகிதம் 1.68 சதவீதம், தொற்றிலிருந்து மீண்டு வருவோர் விகிதம் 98.28 சதவீதமாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 187 ஆக குறைந்தது.இது மொத்த பாதிப்பில் 0.52 சதவீதம் தான்.

நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 48 ஆயிரத்து 847 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 20 லட்சத்து 86 ஆயிரத்து 383 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 325 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 673 ஆக உயர்ந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 11 ஆயிரத்து 230 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்தம் இதுவரை 1,75,37,22,697 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here