இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையால் குணமான கொரோனா நோயாளி

A private hospital in Delhi has become the first hospital in India to use convalescent plasma therapy, which uses antibodies from the blood of cured patients, to treat two Covid-19 patients who were in the intensive care unit (ICU).

0
415

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

கொரோனா சிகிச்சைக்கு தடுப்புமருந்தோ, தடுப்பு ஊசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகம் முழுவதும்பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராயச்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த முறையை உலகின் பல நாடுகளும் இப்போது பின்பற்றி வருகின்றன.

அந்த வகையில், பிளாஸ்மா சிகிச்சை முறையையும் மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒருவர் 400மி.லி பிளாஸ்மாவை தானமாக வழங்கலாம் எனவும், அதைக்கொண்டு இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனவும் டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த முறைடிப்தீரியா போன்ற நோய்களுக்கும், சார்ஸ் நோய்க்கும் பயன்படுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல்  4 ஆம் தேதி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 49 வயதுடைய நபருக்கு, தொற்று உறுதியானது. காய்ச்சல், சுவாச பிரச்னைகளுடன் சிகிச்சையில் இருந்து வந்தவரின் உடல்நிலை மோசமடைந்தது.இதனையடுத்து அடுத்து ஏப்ரல் 8ல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததை அடுத்து, ஏப்ரல் 14ல் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மேக்ஸ் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

பிளாஸ்மா சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு முறை சோதனை செய்ததில் எதிர்மறை முடிவுகள் வரவே, அந்த நபர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆனாலும், இவருடன் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது 80 வயது தந்தைக்கும் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது உடல் மிகவும் மோசமடைந்ததால் ஏப்ரல் 15ல் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தி குணமடைய செய்வது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here