இந்தியாவில் செல்போன் நிறுவனங்கள் பரவலாக தலை தூக்கிய போது முன்னணியில் இருந்த நிறுவனங்களில் ஒன்று ஹட்ச்.2008ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த வோடாஃபோன் நிறுவனம், ஹட்ச் நிறுவனத்தை விலைக்கு வாங்கி, இந்தியாவில் தனது சந்தையை விரிவு படுத்தியது.

இதனை அடுத்து, பல ஆண்டுகளாக முக்கிய நெட்வொர்க் இடத்தில் இருந்த வோடஃபோன், ஜியோ வருகைக்குப் பின்னர் பலத்த பின்னடைவை சந்தித்தது. இதனை சமாளிக்க ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய ஐடியா நிறுவனத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வோடஃபோன் கைகோர்த்தது. இந்த இணைப்பின்மூலம், வோடஃபோன் நிறுவனம் மேலும் நஷ்டத்தை சந்தித்தது.

பங்குச்சந்தையிலும் வோடஃபோன் நிறுவனம் சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி வருவாய் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால், வோடோஃபோன் நிறுவனம்28,309 கோடி ரூபாயை மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசிற்கு செலுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பு வோடோஃபோன் நிறுவனத்துக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்திய சந்தையில் சரிவை சந்தித்து வருவதால், வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது சேவையை நிறுத்தப் போவதாக ஒரு தகவல் பரவிவருகிறது. ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் “வோடஃபோன் நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை விட்டு வெளியேறலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வோடோஃபோன் நிறுவனம் தகுந்த விளக்கத்தை அளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியதில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here