இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய தங்கம் நுகர்வு அல்லது பயன்படுத்தும் நாடாக உள்ளது. இந்நிலையில், சமீப காலமாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் பயன்பாட்டில் கிராமப் புறங்களில்தான் தங்கத்தின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. நகைகள் தயாரிப்புக்காகவே தங்கம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆண்டில் தங்கம் பயன்பாடு குறையும் சூழல் இருப்பதாக உலக தங்க கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பொதுவாக, அக்டோபர் – டிசம்பர் மாதங்களில்தான் பண்டிகை மற்றும் திருமண சீசனை முன்னிட்டு தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் ஏற்பட்ட விலையேற்றம் தங்கம் வாங்குவோரின்எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளது.

உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின் படி இந்த ஆண்டில் இந்தியாவின் தங்கத்துக்கான தேவை 700 டன்னாக மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது சென்ற ஆண்டை விட 8 சதவீதம் குறைவாகும். 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் பயன்பாட்டில் இந்தியா இந்த ஆண்டில் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கவுள்ளது.

ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பருவமழை பொய்த்ததால் கிராமப்புறங்களில் வருவாய் குறைந்து தங்கம் வாங்கும் திறனும் குறைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த தங்கம் நுகர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாதத் தொடக்கத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதும், கடுமையான விலையேற்றம் காரணமாகவும் தங்கம் நுகர்வில் வீழ்ச்சி ஏற்பட்டதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here